அமெரிக்க அட்டார்னி ஜெனரல் பதவி நீக்கம்: ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்காவின் அட்டார்னி ஜெனரல் (Attorney General) பதவியிலிருந்து பாம் பாண்டியை (Pam Bondi) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீக்கியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் இது குறித்து ட்ரம்ப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், பாம் பாண்டி தனியார் துறையில் ஒரு புதிய வேலைக்கு மாற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
துணை அதிகாரி
கடந்த ஓராண்டாக அட்டார்னி ஜெனரலாகப் பணியாற்றிய பாண்டி, நாடு முழுவதும் குற்றங்களைக் குறைப்பதில் சிறப்பாகச் செயல்பட்டதாக ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
குறிப்பாக அவரது பதவிக்காலத்தில் கொலைக் குற்றங்கள் 1900 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைந்த அளவிற்குக் குறைந்துள்ளதாகத் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் பாம் பாண்டிக்குப் பதிலாக அவரது துணை அதிகாரியும் ட்ரம்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞருமான டாட் பிளான்ச் (Todd Blanche) தற்காலிக அட்டார்னி ஜெனரலாக (Acting Attorney General) நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்ரம்பின் நம்பிக்கைக்குரிய சட்ட நிபுணராகக் கருதப்படும் டாட் பிளான்ச், உடனடியாகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்