அமெரிக்காவில் மரத்துப்போன பசிலின் கால்
சிறிலங்கா தலைநகர் கொழும்பின் புறநகரான நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் ராஜபக்சாக்கள் மற்றும் அவர்களின் பங்காளிகள் நேற்று கடும் மழைக்கு மத்தியில் ஒரு பலப்பரீட்சையை நடத்திக்காட்டியிருந்தனர்.
ராஜபக்சாக்களின் எதிராளிகள் என்ற வகையில் அனுர தரப்பு நுகேகொடைக்கு செல்லும் வீதிகளில்; பச்சை புல்கட்டுக்களை கட்டித்தொங்கவிட்டு எருமைகள் மட்டுமே பேரணியில் கலந்து கொள்ளும் என்ற ஒரு எள்ளல் செய்தியை கொடுத்தாலும் ராஜபக்சாக்கள் மற்றும் அவர்களின் பங்காளிகள் நேற்று கடும் மழைக்கு மத்தியில் ஒரு பலப்பரீட்சையை நடாத்திக்காட்டினர்
இந்த பேரணியில் அனுர அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதாக ராஜபச்சாக்கள் குரல் கொடுக்க அவர்களின் கட்சியின் நிறுவனர் பசில் தனது இடது கால் மரத்து விட்டது என நீதிமன்றத்துக்கு நேற்று சொல்லி தன் மீதான பிடியாணையை தவிர்த்த தில்லாலங்கடி நடந்தது.
இலங்கைக்கு பயணம் செய்ய விமான பயணசீட்டுகளை முன்பதிவு செய்த போதிலும் பின்னர் மருத்துவர் விமான பயணம் செய்யக்கூடாது என சொல்லியதால் இந்த அனுமதி சீட்டக்கள் எல்லாம் இரத்து செய்யப்பட்டதாகவும் பசிலின் சட்டவாளர் தரப்பு அடித்துவிட்டது
கடந்த மே மாதத்தில் இடம்பெற்ற வழக்கில் பசில் கதிரையொன்றில் இருந்து கீழே விழுந்ததால் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்ட போதிலும் பசிலின் எக்ஸ்ரே படங்கள் உட்பட்ட மருத்துவ அறிக்ககை அறிக்கைகளில் எலும்பு முறிவுகள் எதுவும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டபோதிலும்; பசில் தன் மீதான பிடியாணையை தவிர்த்த நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு