இரவு வேளை கொழும்பிலிருந்து புறப்பட்ட பேருந்துகள்- மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!
arrest
police
colombo
bus
baticalo
By Kalaimathy
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 3 அதி சொகுசு பேருந்துகள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற மூன்று அதிசொகுசு பேருந்துகளே மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது கைது செய்யப்பட்ட சாரதி, நடத்துனர் உட்பட 49 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொகண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி