விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரை நினைவு கூர்ந்த நபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை!
arrest
police
batticalo
memorial
kalkuda
By Kalaimathy
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைவு கூர்ந்தமைக்காக மட்டக்களப்பு கல்குடா பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறுதி போரின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்காலை நினைவு தினம் தமிழர்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர்,
விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூருவதற்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அந்தவகையில் பிரபாகரனின் மரணத்தை நினைவுகூரும் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக 38 வயதான ஒருவரை கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்