அத்துமீறி காணி அபகரிப்பில் ஈடுபட்ட தவிசாளர்- சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள்!

police batticalo land manmunaipattu
By Kalaimathy Nov 22, 2021 09:27 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்பட்ட கிராங்குளம் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள அரச காணி மற்றும் தனியார் காணியையும் சேர்த்து அவை தமக்குச் சொந்தமானது என சுற்று வேலியிட்டு மண்முனைப் பற்று பிரதேச சபைத் தவிசாளர் தர்மரெத்தினம் தயானந்தன் என்பவர் அடைத்துள்ளதாக கிராங்குளம் கதிரவன் விளையாட்டுக் கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த காணி பிரதேச சபைத் தவிசாளரினால் தூண்கள் இட்டு முட்கம்பிகள் பொருத்தி சுற்று வேலி அடைக்கப்பட்ட இடத்திற்கு இன்று மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர், காத்தான்குடி உதவிப் காவல்துறை அத்தியட்சகர் இந்திக்க பிறேமதிலக்க, காத்தான்குடி காவல்நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி,  பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மன்முனைப் பற்று பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான பரமசிவம் சந்திரகுமார், கிராங்குளம் கதிரவன் விளையாட்டுக் கழகத்தினர், குறித்த நிலப்பரப்பை அடைத்துள்ள மண்முனைப் பற்று பிரதேச சபைத் தவிசாளர் தர்மரெத்தினம் தயானந்தன் உள்ளிட்ட பலரும் சென்று குறித்த நிலப்பரப்பு தொடர்பில் கலந்துரையாடினர்.

இவ்வாறு அடைக்கப்பட்ட நிலப்பரப்பின் ஒருபகுதி அரச காணி எனவும், ஏனையவை தனியார் காணி எனவும், அரச காணியை எல்லையிட்டு அடைக்கப்பட்டிருப்பதை உடன் அகற்ற வேண்டும் எனவும், இல்லையேல் அது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பப்படும் என பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தெரிவித்தார்.

ஏனைய நிலப்பரப்பின் ஒரு ஏக்கர் மிக நீண்டகாலமாக இருந்து சிங்கள சகோதரி ஒருவருக்குச் சொந்தமானது அதனை எமது விளையாட்டுக் கழகத்திற்கு அவர் 2015 ஆண்டு உத்தியோக பூர்வமாக உறுதி எழுத்தி தந்துவிட்டார். இதனுள் நாம் மிக நீண்டகாலமாகவிருந்து விளையாடி வருகின்றோம்.

அதற்குரிய உறுதி, வரைபடம் எல்லாம் எம்மிடம் உள்ளன. இந்த மைதானத்திற்கு அரசாங்கத்தினால் கிரவல் இட்டு புணரமைப்பும் செய்து தரப்பட்டுள்ளது. இக்காணியைத்தான் மண்முனைப் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் அவருடைய காணி என அத்துமீறி அடைத்துள்ளார். இது சட்டத்திற்கு முரணானது என்பதோடு எமது கிராமத்தின் இளைஞர் யுவதிகளின் விளையாட்டுக்களும் கேள்விக்குறியாக்கப்படுகின்றது என கிராங்குளம் கதிரவன் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் என்.ஜசோகரராஜ் தெரிவித்தார்.

இதன்போது விளையாட்டுக் கழகத்தினருக்கும் பிரதேச சபைத் தவிசாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அவ்விடத்திற்கு சென்ற அதிகார்கள் உடன் அவ்விடைத்தைச் சுற்றி இடப்பட்டுள்ள வேலையை அகற்றுமாறும், தவிசாளருக்கு உத்தரவிட்டனர்.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மறுத்த தவிசாளரை குறித்த விடயம் தொடர்பில் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு மீண்டும் ஊடகவியலாளர்கள், கேட்டதற்கிணங்க இது எமது நீண்டகாலச் சொத்து இதனை நாம் 50 வருடகாலமாக பராமரித்த வருகின்றோம். இதனை நீதிமன்றத்தை நாடி மீட்டெடுக்கத் நான் தீர்மானித்துள்ளேன் என தெரிவித்து விட்டு அவ்விடத்திலிருந்து பிரதேச சபை தவிசாளர் வெளியேறிச் சென்றார்.

இந்தக்காணி கிராங்குளம் விளையாட்டுக் கழகத்திற்குச் சொந்தமானது. இதில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. பிரதேச சபைத் தவிசாளர் தன்னிச்சையாக நடந்து கொண்டுள்ளார். தற்போது அதிகாரிகள் தெரிவித்த விடயங்களுக்கு இணங்கி தவிசாளர் செயற்படவில்லையாயின் நான் முன்னின்று சட்டதிட்டங்களுக்குட்பட்டு இக்காணியை இந்த விளையாட்டுக் கழகத்தினருக்குப் பெற்றுக்கொடுப்போன்.

மேலும் இந்த மைதானக் காணியை புணரமைப்பு செய்வதற்கு 5 மில்லியன் நிதி ஒது கீடு செய்துளோம் என இதன்போது மன்முனைப் பற்று பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.

இளைஞர்கள் அவ்விடத்தில் தொடர்ந்து விடையாடுமாறும், விளையாட வேண்டாம் என நீதிமன்ற கட்டளை வந்தால் விளையாட முடியாது எனவும் அதிகாரிகள் இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026