அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரணப்பொதிகள் பழுதடைந்த நிலையில்!
batticalo
mamangam
quarentine
By Kalaimathy
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு மாமாங்கம் கிராமத்திற்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதியில் பழுதடைந்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக இன்றைய தினம் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொதியில் இருந்த நெத்தலி கருவாடு போன்ற பொருட்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால் கிராம சேவகரிடம் மீண்டும் அப்பொருட்களை கையளித்துள்ளனர்.
அரசாங்கத்தால் அதிகளவான நிதிகள் ஒதுக்கப்பட்ட போதிலும் மக்களுக்கு வழங்கும் இந்த நிவாரண பொதிகளிலும் இவ்வாறான உட்கொள்ள முடியாத உணவுகளை வழங்குவது குறித்து மக்கள் அதிர்ச்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது
1ம் ஆண்டு நினைவஞ்சலி