முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நீதிமன்றின் உத்தரவு!
police
court
batticalo
mullivaikkal
yogeshwaran
By Kalaimathy
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுக்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு கட்டளை அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் மக்களை ஒன்றுகூட்டி அனுஷ்டிப்பதாகவும், கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததாவும் தெரிவித்து வாழைச்சேனை பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவை வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவை தனது இல்லத்திற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் வருகை தந்து கையளித்தனர் எனவும் தெரிவித்தார்.


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்