தமிழர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!
மட்டக்களப்பு (Batticaloa) நகரில் நேற்றையதினம் (22.12.2024) இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் 20 வயது இளைஞர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு காவல்துறை பிரிவில் வீதியால் நடந்து சென்றவர் மீது கனரக வாகனம் மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நகர்பகுதியை நோக்கி பிரயாணித்த கனரகவாகம் வீதியை கடக்க முயன்ற ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம்
இந்த விபத்தில் மட்டு நாவக்கேணியைச் சேர்ந்த 46 வயதுடைய சி.சிவநேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை மாமாங்கம் கோவில் வீதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த ஒருவர் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த றொலர் வாகனத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
மாமாங்கம் பாடசாலை வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய ரஞ்சித்து சவிஷ்தன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து வீதியில் கனரக வாகனத்தை நிறுத்திவைத்திருந்த வாகன உரிமையாளர் மற்றும் சாரதி உட்பட இருவரை கைது செய்துள்ளதுடன் வாகனங்கள் காவல் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |