மட்டக்களப்பு சிவில் சமுக செயற்பாட்டாளர் விபத்தில் பலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பகுதியில் வியாழக்கிழமை(21.03.2024) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கரடியனாறு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பதுளைவீதி, புலையவெளிப்பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் மீது
இவ்விபத்துச் சம்பவத்தில், செங்கலடி கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான சிவில் சமூக செயற்பாட்டாளரான தம்பிநாயகம் சிறிபாலு என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவரது தொழில் நிமித்தம் கரடியனாறு பகுதியில் இருந்து செங்கலடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் மீது மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் உரிமை மீறல்களுக்காக
சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கரடியனாறு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்து மாவட்ட மக்களின் உரிமை மீறல்களுக்காகவும், இழைக்கப்படும் அநீதிகளுக்காகவும் குரல் கொடுத்து வந்தவர் ஆவார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |