மட்டக்களப்பு வாவியில் மிதந்த ஆணின் சடலம்!
Death
Police
Eastern Province
Batticaloa
By Vasanth
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு தேற்றாத்தீவு கடற்கரையை அண்டிய வாவிப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று காலை கரையொதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி