விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய சாரதி - மடக்கிப் பிடித்த காவல்துறையினர்..!
Sonnalum Kuttram
By Niraj David
மட்டக்களப்பில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய சாரதியை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் இன்று(12) பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து ஏற்படுத்திய மகிழுந்து சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விசாரணை

மதுபோதையில் மகிழுந்தில் வந்த நபர் விபத்தை ஏற்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரை கண்டு ஓடியுள்ளார்.
இதை கவனித்த காவல்துறையினர் ஓடிய சாரதியை துரத்தி பிடித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



5ம் ஆண்டு நினைவஞ்சலி