எட்டு வயது சிறுவனை தாக்கிய மதகுரு கைது..!
Sri Lanka Police
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
By Dilakshan
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் எட்டு வயது சிறுவனை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் மவ்லவி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கல்விக்காக தேவாலயத்திற்கு சனிக்கிழமை (28) இரவு சென்ற வேளை குறித்த சந்தேக நபர் குழந்தையை தடியொன்றினால் தாக்கியதாக கிடைக்கபெற்ற முறைப்பாடு ஒன்றினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தாக்குதலினால் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
அதேவேளை, மனப்பாடம் செய்வதற்கு கொடுத்த பாடத்தை முறையாக மனப்பாடம் செய்யாத காரணத்தினால் சிறுவன் தாக்கப்பட்டதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 13 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
21 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்