மட்டக்களப்பில் டெல்டா வைரஸ் கண்டுபிடிப்பு
covid
virus
delta
batticolia
By Vanan
மட்டக்களப்பில் டெல்டா மற்றும் அல்பா வீரியன் தொற்றுள்ளவர்கள் அடையாம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார் .
கடந்த சில திங்களுக்கு முன் பரிசோதனைக்காக அனுப்பப்பட் ட 3 மாதிரிகளில் இருவருக்கு டெல்டா தொற்றும் ஒருவருக்கு அல்பா தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலத்தில் 274 தொற்றாளர்களும் 10 மரணமும் சம்பவித்துள்ளதுடன் மட்டக்களப்பில் சராசரியாக 300 க்கு மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதுடன் மொத்தமாக 211பேர் மரணமடைந்துள்ளார்.
மக்கள் பாதுகாப்புடன் சுகாதார நடைமுறைகளை பேணுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி