தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்- தீவிர விசாரணையில் காவல்துறை!
தென்னிலங்கையில் நபர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
களுத்துறை பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
களுத்துறை அகலவத்தை காவல்துறை பிரிவின் குடலிகம - நேபட பிரதேசத்தில் குடிபோதையினால் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாய்த்தர்க்கம் முற்றியதன் காரணமாகவே குறித்த நபர் மண்வெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 46 வயதுடைய நேபட பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றயை தினம் மத்துகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.