மாணவர்களுக்கு நற்செய்தி: வருகை விசா கட்டணமின்றி பெலாரஸ் நாட்டில் உயர்கல்வி
உயர்கல்வி பயில்வதற்காக முதன்முறையாக பெலாரஸ் நாட்டுக்கு வரும் இலங்கை மாணவர்களுக்கான வருகை விசா கட்டணத்தை இரத்து செய்ய பெலாரஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2026 மே மாதம் பெலாரஸிற்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜயத ஹெரத் மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணத்தைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தற்போது பெலாரஸில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களைச் சந்திக்க விரும்பும் குடும்ப உறுப்பினர்களுக்கான விசா விண்ணப்ப நடைமுறைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நிதி நிவாரணம்
இந்த நடவடிக்கைகள், பெலாரஸில் உயர்கல்வி பயில விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு நிதி நிவாரணம் அளிப்பதோடு, அவர்களது குடும்பத்தினர் அவர்களைச் சந்திப்பதை எளிதாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெலாரஸ் நாட்டின் இந்தத் தீர்மானம் மாணவர்களின் கல்விக்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |