உலகின் மிகப்பெரிய பைபிள் டுபாயில் உருவாக்கம்
டுபாயில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த குடும்பத்தினர் கையால் எழுதிய உலகின் மிகப்பெரிய பைபிளை உருவாக்கியுள்ளனர்.
அந்த பைபிளை டுபாயில் உள்ள மார் தோமா தேவாலயத்திற்கு அவர்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
டுபாயில் வசித்து வருபவர் மனோஜ் சாமுவேல். இவரது மனைவி சூசன் சாமுவேல். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர்களுக்கு கருண் என்ற மகனும், கிருபா சாரா என்ற மகளும் உள்ளனர்.
இவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து உலகின் மிகப்பெரிய பைபிள் புத்தகத்தை தயார் செய்துள்ளனர்.
இதற்காக 5 மாதங்கள் தினமும் 15 மணி நேரம் இந்த பைபிளை உருவாக்க செலவிட்டுள்ளனர். முழுவதும் கையால் எழுதப்பட்ட இந்த பைபிள் 1,500 பக்கங்களுக்கு மேல் உள்ளது. மொத்தம் 8 இலட்சம் வார்த்தைகள் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 60 பேனாக்களை இந்தக் குடும்பத்தினர் பயன்படுத்தி எழுதியுள்ளனர்.
சாதாரண ஏ4 அளவுள்ள காகிதத்தை விட 8 மடங்கு பெரிதான ஏ-1 அளவுள்ள காகிதங்களில் இந்த பைபிள் எழுதப்பட்டுள்ளது. தற்போது கின்னஸ் நிறுவனம் இதனை அங்கீகரித்து சான்றிதழ் தர உள்ளது என அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
டுபாய் ஜெபல் அலி பகுதியில் உள்ள மார் தோமா தேவாலயத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்த பொன்விழாவை முன்னிட்டு இதனை அங்கு வழங்குவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
