ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹெமசிரி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை

CID - Sri Lanka Police Easter Attack Sri Lanka Hemasiri Fernando
By Dharu Jul 31, 2026 02:22 PM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் பொறுப்பைத் தட்டிக்கழித்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு கொழும்பு நிரந்தர மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த உத்தரவு இன்று (31) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகவும், முன்கூட்டியே கிடைத்த உளவுத்துறை தகவல்களைப் பொருட்படுத்தாமல் கடமையை மீறியதாகவும் குற்றஞ்சாட்டி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

ஈஸ்டர் தாக்குதலின் முதல் தீர்ப்புக்கு முன்னர் பூஜித் கடத்திய 7 வருடங்கள்

ஈஸ்டர் தாக்குதலின் முதல் தீர்ப்புக்கு முன்னர் பூஜித் கடத்திய 7 வருடங்கள்

மரண தண்டனை 

இதன்படி இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணையில் போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும்மூவரடங்கிய விசேட உயர்நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்தது.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹெமசிரி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை | Hemasiri Sentenced To Death In Easter Sunday Case

இந்நிலையில் இந்த வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியான ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பை அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை

இந்த வழக்கு இன்று (31) பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய நீதியரசர்கள் அடங்கிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதியரசர்கள் பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் பெரும்பான்மை தீர்ப்பை அறிவித்தனர். அதில், சட்டமா அதிபர் தரப்பினால் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்! ஹேமசிறி பெர்னாண்டோ - பூஜித் ஜயசுந்தர வழக்கின் தீர்ப்பு இன்று

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்! ஹேமசிறி பெர்னாண்டோ - பூஜித் ஜயசுந்தர வழக்கின் தீர்ப்பு இன்று

ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு கிடைத்த தகவல் 

தீர்ப்பை அறிவித்த நீதியரசர்கள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னைய தினம் மாலை, அரச புலனாய்வு சேவையின் அப்போதைய பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, மறுநாள் இடம்பெறவிருந்த தாக்குதல் தொடர்பான தகவல்களை ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு அறிவித்திருந்ததாக தெரிவித்தனர்.

அந்த தகவல்களைப் பெற்றிருந்த போதிலும், பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் தாக்குதலைத் தடுப்பதற்கான எந்தவொரு பயனுள்ள நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹெமசிரி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை | Hemasiri Sentenced To Death In Easter Sunday Case

மேலும், புலனாய்வு அதிகாரிகளின் கூட்டமொன்றை கூட்டி தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியிருக்க முடியும் என்றும், முப்படையினருடன் இணைந்து தாக்குதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் அவருக்கு இருந்ததாகவும் பெரும்பான்மை நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர்.

எனினும், அவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்ட நீதிமன்றம், தாக்குதல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதை அறிந்திருந்தும் அதனைத் தடுப்பதற்கான கடமையை நிறைவேற்றத் தவறியதாகத் தெரிவித்தது.

இதன் அடிப்படையில், தனது அரச கடமையை நிறைவேற்றத் தவறியமை மற்றும் கொலைக்கு உதவி, ஊக்கமளித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றவாளி என பெரும்பான்மை நீதியரசர்கள் தீர்மானித்தனர்.

இதேவேளை, நீதியரசர் விராஜ் வீரசூரிய தனது சிறுபான்மை தீர்ப்பை அறிவித்தபோது, ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

அதன்படி, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்ய வேண்டும் என நீதியரசர் விராஜ் வீரசூரிய குறிப்பிட்டார். எனினும், மூவரடங்கிய நீதியரசர்கள்  குழுவின் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆயுதகளைவு டீல் ஹமாசும்! ஈஸ்டர் சதி பணப்பாதை அதிரடி சோதனைகளும்!

ஆயுதகளைவு டீல் ஹமாசும்! ஈஸ்டர் சதி பணப்பாதை அதிரடி சோதனைகளும்!

உயிர்த்த ஞாயிறு இழப்பீட்டு வழக்கு! பூஜித் ஜயசுந்தர - நிலந்தவுக்கு நீதிமன்றின் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு இழப்பீட்டு வழக்கு! பூஜித் ஜயசுந்தர - நிலந்தவுக்கு நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025