இதனை நிறுத்த வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் தொடர்பில் பைடன் கூறிய விடயம்
காசாவில் ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான போரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீங்கிழைத்து வருவதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஊடகடொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இஸ்ரேலின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல்களினால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருவதாகவும் இது தொடர்பில் நெதன்யாகு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சா்வதேச ஆதரவு
மேலும், அதனை பைடன் மிகப்பெரிய தவறாக கருதுவதாகவும் இலட்சக்கணக்கான பலஸ்தீன மக்கள் அடைக்கலம் புகுந்துள்ள ராஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் தனது சா்வதேச ஆதரவை இழக்க நேரிடும் என்றும் அதிபா் பைடன் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |