தேஷபந்து தென்னகோனின் புதிய நியமனம்: வன்மையாக கண்டிக்கும் கத்தோலிக்க திருச்சபை
Sri Lanka Police
Sri Lankan Peoples
Easter Attack Sri Lanka
By Dilakshan
தேஷபந்து தென்னகோனின் புதிய நியமனமானது ஈஸ்டர் தினத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடந்த மிகப்பெரிய அவமானம் என கொழும்பு பேராயர்களின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு தனது கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு அவர், தேஷபந்துவின் நியமனத்தை புனித கர்தினால் அவமதிப்புடன் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.
வன்மையாக நிராகரிப்பு
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், அந்த நியமனத்தை வன்மையாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்