ட்ரம்பின் வரிவிதிப்பு எதிரொலி : கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்
உலக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் (donald trump)அறிவித்த நிலையில், உலக கோடீஸ்வரர்கள் பலர் கோடிக்கணக்கில் சொத்துகளை இழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் 180 நாடுகளுக்கு வரி விதிப்பை அறிவித்து நடைமுறைப்படுத்த ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் பங்குச்சந்தைகளில் நேற்று(03) சரிவு ஏற்பட்டது. இதனுடன் உலக கோடீஸ்வரர்கள் பலர் கோடிக்கணக்கில் சொத்துகளை இழந்துள்ளனர். அவர்களில் பலர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாவது இடத்தில் மார்க் ஜூக்கர்பெர்க்
அவர்களில் முதலாவது இடத்தில் இருப்பவர், பேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg). இவர் இழந்த தொகை ஒரு லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய்.
இதற்கு அடுத்த இடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஜோஸ் உள்ளார். இவருக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 993 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
ட்ரம்ப்பின் நெருங்கிய நண்பருக்கு ஏற்பட்ட இழப்பு
ட்ரம்ப்பின் நெருங்கிய நண்பரான எலோன் மஸ்க்கிற்கு(elon musk) 94 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இவர்களை தவிர்த்து, அமெரிக்காவை சேர்ந்த மைக்கல் டெல், லாரி எல்லிசன், ஜென்சன் ஹூவாங், லாரி பேஜ், செர்ஜி பிரின், தாமஸ் பீட்டர்பி ஆகியோருக்கும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவை தாண்டி , பிரான்சின் பெர்னாட் அர்னால்ட்டின் சொத்துகளும் சரிவை சந்தித்து உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 10 மணி நேரம் முன்
