பிறப்பு இறப்பு - திருமண சான்றிதழ்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு
நாட்டில் உள்ள சில பதிவாளர்கள் பிறப்பு, திருமணங்கள் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட பிரதிகளை அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெற்றோர், திருமணமான தம்பதிகள் மற்றும் பாதுகாவலர்களுக்கு ஒரு நகலை வழங்கினாலும் ஏனைய பிரதிகள் பிரதேச செயலகங்களுக்கு சென்றடையவில்லை என கூறப்படுகின்றது.
குறித்த தகவல்களை பதிவாளர் நாயகம் (Registrar General) டபிள்யூ.ஆர்.ஏ.என்.எஸ்.விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியர் ரஜீவை வெளியேற்றி விட்டு நாற்காலியில் அமர்ந்த அர்ச்சுனா : சாவகச்சேரி வைத்தியசாலையில் அதிரடி
சிக்கல் நிலை
அவர் மேலும் தெரிவிக்கையில், இதனால் பிறப்பு, திருமணம், இறப்பு நகல்களை பெற்றுக்கொள்வதற்காக ஆவண காப்பகத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட பிரதேச செயலக அலுவலகங்களுக்கோ சென்றாலும் பிரதிகள் இல்லாமையினால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சில பதிவாளர்கள் பிறப்பு, திருமணம், இறப்பு பதிவு செய்தாலும், சம்பந்தப்பட்ட புத்தகத்தில் உள்ள தகவல்களை நகல் எடுப்பதில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 400 பிறப்பு, திருமண, இறப்பு பதிவாளர்கள் இருப்பதாகவும், அவ்வாறான சம்பவம் ஏதேனும் ஒரு இடத்தில் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பில் ஆராய முடியும் எனவும் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |