பலஸ்தீனப் போராளிகளை இரக்கமின்றி அழித்த ஒரு அரபு நாடு
பலஸ்தீன மக்களை இஸ்ரேல் மாத்திரமல்ல மேற்குலகம் மாத்திரமல்ல பல அரபு தேசங்களும் வஞ்சிக்கவே செய்தன.
எடுத்துக்காட்டாக, ஜோர்தான் தனது நாட்டிற்கு அகதிகளாக அபயம் தேடி வந்த பலஸ்தீன மக்களை கொலை செய்து மிரட்டியது.
Black September என்ற பெயரில், இரத்தத்தால் எழுதப்பட்ட அந்த வரலாற்று சம்பவம் தொடர்பாகவே இன்றைய ஐ.பி.சி தமிழின் நிதர்சனம் தொகுப்பு ஆராய்கின்றது.
ஆயுத பயிற்சி
பலஸ்தீனத்தின் மேற்க்கு கரையை 1947 ஆம் ஆண்டு ஜோர்தான் ஆக்கிரமித்தது.
சுமார் 20 வருடங்கள் மேற்கு கரை முற்று முழுதாகவே ஜோர்தானின் ஆளுகையின் கீழ் இருந்து வந்த காலப்பகுதியில், பலஸ்தீன போராளிகளை உருவாக்கி இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தும்படி தூண்டியிருந்தன அரபு நாடுகள்.
பலஸ்தீன போராளிகளுக்கு ஆயுத பயிற்சிகளையும், பலவிதமான நவீன ஆயுதங்களையும் வழங்கிய அரபு நாடுகள் ஜோர்தானிலும் மேற்க்கு கரையிலும் அவர்களுக்கு பல தளங்களையும் அமைத்து கொடுத்திருந்தன.
அரபு உலகின் உதவிகளுடன் இஸ்ரேலுக்கெதிரான பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டன பலஸ்தீன விடுதலை அமைப்புக்கள்.
மேற்படி விடயம் குறித்த மேலதிக தகவல்களை காணொளியில் காண்க.