கல்விக்கு பார்வை ஒரு பொருட்டல்ல! யாழில் சாதித்த வாழ்வக மாணவர்கள்
ஒரு மனிதனின் வாழ்வும் நிலைத்திருப்பும் இயற்கை தீர்மானிக்கும் விடயம் என்று சாதாரணமாகக் கூறி கடந்து சென்று விட முடியாது.
நாம் சமூகத்தில் நல்ல நிலையை அடைந்து உயர்ந்த நிலையான வாழ்வை வாழ்வதற்கும் சமூகத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கும் எங்கள் அகக்கண்களை திறக்கும் திறவுகோலாக கல்வி முக்கிய இடம் வகிக்கிறது.
அண்மையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளியாகி, பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதியையும் பெற்று இன்று அனைவர் மத்தியிலும் நல்ல மதிப்பினையும் மரியாதையினையும் பெற்று நம் மாணவகள் உலா வருகிறார்கள்.
இவர்களின் மத்தியில் வாழ்வில் ஒவ்வொரு நாளையும் சவாலான நாளாக கடந்து கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள், வாழ்வகத்தின் பொக்கிஷங்கள், அவயவங்கள் சீராக இயங்கும் சக மாணவர்களோடு இணைந்து படித்து யாரும் எதிர்பார்த்திடா உன்னத பெறுபேறுகளைப் பெற்று எம்மாலும் சாதிக்க முடியும் என்று இன்று மார்தட்டி நிற்கிறார்கள்.
கற்றவர்கள் தான் கண்ணுடையவர்கள் என்பர், கண்களை இழந்த நாங்கள் எங்கள் அகக்கண்களால் கற்று உயர்ந்திருக்கிறோம் என்று அனைவரையும் உணர்வுபூர்வமாக மனமுருக வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் தம் வெற்றிக்களிப்பை நன்றிகளாய் வெளிப்படுத்துகிறார்கள். வழிதவறி நாம் சென்றிடாமல் விழியற்ற தமக்கு வழியாக வந்தோர் பலர் என்று அனைவருக்கும் நன்றிகளை பரிசளித்திருக்கிறார்கள்.
இவர்களின் உருக்கமான செவ்வியினை ஐபிசி தமிழின் அகலளங்கம் நிகழ்ச்சியில் காண்போம்,
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 மணி நேரம் முன்