வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர்கள் : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் இருப்பதாக நம்பப்படும் முன்னாள் அமைச்சர்கள், பாதாள உலகக் குழுத் தலைவர்கள் குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த நபர்களை திரும்ப அழைத்து வருவதற்காக, எதிர்காலத்தில் நீல அறிவிப்புகள் அல்லது சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.
நீதிமன்ற பிடியாணைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக இருந்தாலும் சரி அல்லது பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக இருந்தாலும் சரி, நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் ஒவ்வொரு பிடியாணைகள் தொடர்பில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.

பல முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, அந்த வழக்குகளிலும் அதே சட்ட நடைமுறை பின்பற்றப்படுகின்றது.
காவல்துறை திணைக்களம் நீதிமன்ற உத்தரவுகளை சட்டத்திற்கு இணங்க செயற்படுத்தி வருகிறது. சந்தேக நபர்களை நாட்டுக்கு திரும்ப அழைப்பதை உறுதிசெய்ய தேவைப்படும் இடங்களில் சர்வதேச ஒத்துழைப்பை அரசாங்கம் நாடும்“ என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |