பிரித்தானிய வானில் தோன்றிய மர்ம ஒளி: ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்
பிரித்தானியாவின்(Uk) வானத்தில் மர்மமான சூழல் வடிவிலான ஒளி தோன்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலரும் அதனை வேற்றுகிரக விண்கலம்(UFO) என கூறியுள்ளனர்.
மாண்ட்செஸ்டர், டெர்பிஷைர், யார்க்ஷையர் உள்ளிட்ட வடக்கு பிரதேசங்களில் இந்த மர்ம ஒளி தோன்றியுள்ளது.
மர்ம ஒளி
இதுகுறித்து வினோதக் கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
அத்துடன், குறித்த மர்ம ஒளி வானில் மெதுவாக நகர்ந்துகொண்டே மறைந்ததாக காட்சியைக் கண்டவர்கள் பகிர்ந்துள்ளனர்.
வெளியான உண்மை காரணம்
இந்நிலையில் குறித்த மர்ம ஒளி வேற்றுகிரக விண்கலம் இல்லை என்ற உண்மை வெளிவந்துள்ளது.
இது SpaceX Falcon 9 ரொக்கெட் ஏவுதலால் உருவானது. அமெரிக்க தேசிய ரகசிய சேவை (NROL-69) திட்டத்தின் கீழ், கேப் கானாவெரலில் இருந்து (அமெரிக்கா) புறப்பட்ட இந்த ரொக்கெட், தேவையற்ற எரிபொருளை (excess fuel) வெளியேற்றியது.
வெளிவந்த இந்த எரிபொருள் உலக சுற்றுச்சூழலில் உறைந்து, சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் வானத்தில் சுழல் வடிவிலான ஒளிவட்டம் தோன்றியுள்ளது.
UK. The blue spiral has been spotted all across England & Wales this evening on 24/03/25. 🇬🇧🌀https://t.co/viL99kxD7N pic.twitter.com/ToMl8BOJxf
— ZetaTalk Followers: Watch X, Planet X, aka Nibiru (@ZT_Followers) March 24, 2025
இதேபோன்று 2023ஆம் ஆண்டிலும் SpaceX ரொக்கெட் ஏவுதலின் போது அமெரிக்காவிலும் காணப்பட்டுள்ளது.
இது ஒரு 'Rocket Ice Cloud' எனப்படும் நிகழ்வு, ரொக்கெட் வெளியேற்றும் உறைந்த நீராவி சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் இவ்வாறு தோன்றுகிறது" என்று Met Office அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 13 மணி நேரம் முன்
