பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…

Sri Lanka Sri Lanka Final War United Kingdom
By Theepachelvan Mar 25, 2025 03:16 PM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்  

சிறிலங்கா இராணுவத்தினர் இழைத்த போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்காக உலக நாடுகள் இவர்களை தடை செய்யும்போது எங்கள் மண்ணில் நாம் வாழ்வதற்கும் எழுதுவதற்கும் அச்சுறுத்தலை விடுவிக்கும் வேலைகளில் இராணுவத் தரப்பு ஈடுபடுகிறது.

எனது நாவல் வெளியீட்டிற்கான அழைப்பிதழை வழங்கிக் கொண்டிருந்த வேளையில், இந்த அழைப்பிதழை தமக்கு இராணுவப் புலனாய்வாளர்கள் முன்னரே அனுப்பி நிகழ்வு பற்றி விசாரித்ததாக கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் கூறினார்.

ஆட்சி மாறியும் இராணுவத்தின் ஒடுக்குமுறைகளின் காட்சி இன்னமும் மாறாமல் இருக்கும் நிலையில் பிரிட்டனர் அரசு, இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது விதித்த தடையைக் கண்டு இனவழிப்புப் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆறுதலை வெளிப்படுத்துகின்றனர்.

பிரிட்டனின் அதிரடித்தடை

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து முன்னாள் இராணுவ  தளபதிகள் கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது.

 இலங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என்ற அடிப்படையில் முன்னாள் இராணுவதளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட, முன்னாள் இராணுவதளபதி ஜகத்ஜெயசூரிய, கருணா குழு என்ற துணைப்படைக்கு தலைமை தாங்கிய கருணா அம்மான் முதலியோருக்கு எதிராக பிரிட்டன் அரசு தடையை அறிவித்துள்ளது.

பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… | Britain S Ban The Next Crisis For Sri Lanka

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள, பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகம், “பிரிட்டன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது பாரதூரமான உரிமை மீறல்கள்  துஸ்பிரயோங்களில் ஈடுபட்டமைக்காக இலங்கையின் முன்னாள் தளபதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி ஆகியோருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.

பாரதூரமான மனித உரிமை மீறல்கள் துஷ்பிரயோகங்களிற்கு  பொறுப்புக்கூறலைஉறுதி செய்வதும், தண்டனையின் பிடியிலிருருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்தை தடுப்பதும் இதன் நோக்கம்.

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் மனித உரிமைகள் இணைந்து பணியாற்றுவது குறித்து பிரிட்டன் அர்ப்பணிப்புடன் உள்ளது,தேசிய ஐக்கியம் தொடர்பான அவர்களின் அர்ப்பணிப்பை பிரிட்டன் வரவேற்கின்றது.

பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… | Britain S Ban The Next Crisis For Sri Lanka

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது சட்டவிரோத படுகொலைகள் சித்திரவதைகள் பாலியல்வன்முறைகள் உட்பட பாரிய மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டமைக்காக நால்வருக்கு எதிராக தடை அறிவிக்கப்பட்டதாகவும் போக்குவரத்து தடைகள்,சொத்துக்களை முடக்குதல் உட்பட பல நடவடிக்கைகள் இந்த தடைகளில் உள்ளடங்குகின்றன.

வரவேற்கும் கனடா

“இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன்...” என்று கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி  தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என்று கூறியுள்ள ஹரி ஆனந்தசங்கரி  2023 இல் கனடா மகிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளமையினையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும்,சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா தொடர்ந்து பாடுபடும் என்றும் கனடா நாட்டின் ஆதரவை அவர் குறிப்பிட்டுள்ளார். 

பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… | Britain S Ban The Next Crisis For Sri Lanka

கடந்த 2023ஆம் ஆண்டு அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலின் போது தெரிவித்தார்.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்து தமிழ்நாடு சட்டசபையிலும் வடக்கு மாகாண சபையிலும் இயற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து முதன் முதலில் உலக நாடு ஒன்று ஈழ இனப்படுகொலையை ஏற்றுக்கொண்டமையானது, காயப்பட்ட ஈழ மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்திருந்தது.

அத்துடன், அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  தனது உரையில், “நாங்கள் 14 வருடங்களிற்கு பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைகூறுகின்றோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையில்உட்பட  ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் இழக்கப்பட்டன,பலர் காணாமல்போனார்கள் காயமடைந்தார்கள் இடம்பெயர்ந்தார்கள்.

பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… | Britain S Ban The Next Crisis For Sri Lanka

கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட துயரத்துடன் தொடர்ந்தும் வாழும் அவர்களின் குடும்பத்தவர்கள் குறித்து எங்கள் சிந்தனைகள் உள்ளன…” என்று தனது சிரக்தையை வெளிப்படுத்தியுள்ளார்.

இனப்படுகொலை நினைவுதினம்

அத்துடன் இனப்படுகொலை நினைவுதினத்தையும் கடந்த ஆண்டு கனடா அறிவித்திருந்தது. “கனடாவின் பல சமூகங்களில் நான் சந்தித்த பலர் தமிழ் கனடா பிரஜைகளின் கதைகள் மனித உரிமைகள் சமாதானம் ஜனநாயகம் போன்றவற்றை இலகுவாக கருதமுடியாது என்பதை நினைவுபடுத்தி நிற்கின்றன.

இதன்காரணமாகவே கடந்த வருடம் மே18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவுதினமாக நாங்கள் அங்கீகரித்தோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர், மோதலால் கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் உரிமைக்காகவும்  இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர் கொண்டுள்ளவர்களிற்காக  குரல்கொடுப்பதை கனடா நிறுத்தாது…” என்றும் அழுத்தம் திருத்தமாக கூறினார் கனடா பிரதமர். இப்படியான பன்னாட்டுச் சமூகத்தின் கவனமே நீதிக்கு அடிப்படையான வழி. 

பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… | Britain S Ban The Next Crisis For Sri Lanka

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 15 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் இழப்புக்களுடனும் காயங்களுடனும் வாழ்கின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் குறித்து எந்த நீதியும் வழங்கப்படவில்லை.

மாறாக தொடர்ந்தும் ஈழத் தமிழ் இனத்தை சிதைத்து அழித்து முடிக்கும் வேலையிலும் வடக்கு கிழக்கை தொடர்ந்து இராணுவமயப்படுத்தி ஒடுக்கும் நடவடிக்கையிலும் சிறிலங்கா ஈடுபடுகிறது.

பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… | Britain S Ban The Next Crisis For Sri Lanka

இந்த நிலையில் பிரிட்டனின் இந்த அறிவிப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியில் அமர்ந்துள்ள புதிய அரசுக்கு இது பெரும் நெருக்கடியாகும். ஆனால் பொறுப்புக்கூறுதல் குறித்த அனுர அரசாங்கம் பொறுப்பற்றே இருந்தது.

இலங்கையில் பொறுப்புக்கூறுதல் மற்றும் நீதியை நிலைநாட்டுதலே ஈழத் தமிழரின் அமைதிக்கும் ஆற்றுப்படுதலுக்கும் அடிப்படையானது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 25 March, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Mississauga, Canada

27 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Gravesend, United Kingdom, Kent, United Kingdom

01 Mar, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Scarborough, Canada

27 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, கொழும்பு

01 Mar, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரிஸ், France

30 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

28 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Paris, France

18 Mar, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

27 Mar, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, கரவெட்டி, Harrow, United Kingdom

27 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, London, United Kingdom

22 Mar, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France, வவுனியா

28 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Rosny-sous-Bois, France

20 Mar, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, மானிப்பாய், Ontario, Canada

26 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பழுகாமம் மட்டக்களப்பு, மண்டூர், Mississauga, Canada

28 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023