கொழும்பு - ப்ளூமென்டலில் சுமார் 25 வீடுகளில் தீ விபத்து
Western Province
Fire
By Sindu
கொழும்பு, ப்ளூமென்டல் பகுதியில் சுமார் 25 வீடுகளில் தீப்பிடித்துள்ளதாக கொழும்பு தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் பதிவாகியுள்ளது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவரவும், அது அருகிலுள்ள சொத்துக்களுக்குப் பரவாமல் தடுக்கவும் ஆறு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அத்துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்திற்கான காரணம் மற்றும் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் அப் பகுதியில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |









மரண அறிவித்தல்