சுட்டுக்கொல்லப்பட்ட மித்தெனிய கஜ்ஜாவின் மகன் துப்பாக்கியுடன் கைது!
கொலை செய்யப்பட்ட 'மித்தெனிய கஜ்ஜா' என அழைக்கப்படும் அருண விதான கமகேவின் மகன் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்காலை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் வீரகெட்டியவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, நேற்று (12) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சோதனையின்போது, வீரகெட்டியவின் யக்கஸ்முல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 'போல்ட்-அக்சன்' (bolt-action) வகையிலான 12-போர் (12-bore) துப்பாக்கியை அதிகாரிகள் மீட்டனர்.
அருண விதானகமகே
கைப்பற்றப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வீரகெட்டிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் கடந்த ஆண்டு மித்தெனிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு குழந்தைகளுடன் கொல்லப்பட்ட “மித்தெனிய கஜ்ஜா“ எனப்படும் அருண விதானகமகேவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |