ராஜபக்சர்களுக்கு தொடரும் சிக்கல்...! விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு
Namal Rajapaksa
Sri Lanka Politician
Sri Lanka
By Shalini Balachandran
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்காக நடத்தப்படவிருந்த போதிப் பூஜை நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.
நாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவும், அவரது உடல் ஆரோக்கியதற்காகவும் ஆசி வேண்டி போதி பூஜை நடத்தப்படவிருந்தது.
இதனடிப்படையில் இன்று (21-09-2026) மாலை 4.00 மணிக்கு மாத்தறை விகாரையில் நடத்தப்படுவதாக இருந்த போதிப் பூஜை நிகழ்வை நடத்த அனுமதி வழங்க முடியாது என மாத்தறை போதிப் பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளது.
வழிபாட்டுத் தலம்
இந்தப் போதிப் பூஜையை நடத்துவதற்கான அனைத்து அனுமதிகளும் சில நாட்களுக்கு முன்பு பெறப்பட்டிருந்தன.

அதற்கமைய, நாமல் ராஜபக்சவிற்காக நடத்தப்படவிருந்த போதிப் பூஜையை வேறு மத வழிபாட்டுத் தலமொன்றில் நடத்த வேண்டிய நிலை அதன் அமைப்பாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி