தலையில் கற்களால் தாக்கி கொலை - சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடைக்கு

Death Prisons in Sri Lanka Prison
By Thulsi Jul 08, 2026 05:27 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன.

குறித்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

கடந்த 6 ஆம் திகதி காலை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில், சிறைக்கைதிகளின் கொடூரமான தாக்குதல்களுக்கு இலக்காகி சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்தனர்.

அவசர அவசரமாக புதிய சிறைச்சாலை - அதிரடியாக வெளியான வர்த்தமானி

அவசர அவசரமாக புதிய சிறைச்சாலை - அதிரடியாக வெளியான வர்த்தமானி

கற்களால் தாக்குதல்

கடந்த 5 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலைமை தணிவடைந்த பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் அதற்கு அடுத்த நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (06) காலை கைதிகளுக்கு உணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

தலையில் கற்களால் தாக்கி கொலை - சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடைக்கு | Bodies Of Prison Officials Taken Welikada Prison

அச்சமயத்தில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதுடன், அதனைத் தடுத்து நிறுத்தச் சென்ற சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மீதும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவ்வேளையில் பல்லன்சேன சிறைச்சாலைக்கு புதிய நியமனம் பெற்று வந்திருந்த பிரதான ஜெயிலரும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக அங்கு வருகை தந்திருந்ததுடன், அவர் மீதும் கைதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் மீது தாக்குதல்! வெலிக்கடை - அங்குனுகோலாவில் இருவர் பலி

நீர்கொழும்பிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் மீது தாக்குதல்! வெலிக்கடை - அங்குனுகோலாவில் இருவர் பலி

கொடூரமான தாக்குதல் 

அதிகாரிகளால் அவர் காப்பாற்றப்பட்ட போதிலும், நிலைமையைக் கட்டுப்படுத்தச் சென்ற சிறைச்சாலை அதிகாரிகள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தலையில் கற்களால் தாக்கி கொலை - சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடைக்கு | Bodies Of Prison Officials Taken Welikada Prison

சில அதிகாரிகளின் தலை மீது பெரிய கற்களைப் போட்டு கைதிகள் தாக்கியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், இந்த மோதலில் மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

நடுவானில் மாயமான சரக்கு விமானம்

நடுவானில் மாயமான சரக்கு விமானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026