செவ்வந்தியின் புலனாய்வுப் பயிற்சிகளில் Body Double தொடர்பான தகவல்கள்
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள உளவுத்துறை அதிகாரிகளுக்கும், ஒரு பயனுள்ள முறையாக உருவாக்கப்பட்டதாக கருதப்படும் ஒரு விடயமாக Body Double தந்திரோபாய முறை காணப்படுகிறது.
படுகொலையைத் தவிர்ப்பதற்கோ அல்லது எதிரியை வழிதவறச் செய்வதற்கோ ஒரு முறையாகச் செயல்பட இதனை பல அதிகாரத்தவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் இன்று இலங்கையை தாண்டி உலகச் செய்திகளிலும் வரிக்கு வரி வெளிப்படுத்தப்படும் கனேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரமும், அதன் சூத்திரதாரியான இஷார தொடர்பான Body Double திட்டமிடல்களும் விசாரணை அதிகாரிகளையே ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய வைத்திருக்க கூடும் என்பதை கூறியாகவேண்டும்.
ஒரு நபரை திட்டமிட்டு கொலை செய்து, அந்த கொலையில் இருந்து தப்பித்து நாடுகடந்து சென்று, அங்கு சுற்றிவளைக்கப்பட்டு தற்போது நாட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் இஷார செவ்வந்தி Body Double முறையில் தன்னை மாற்றிக்கொள்ளவும், அதனை கொண்டு ஐரோப்பிய நாட்டுக்கு தப்பித்து செல்ல முடியும் என திட்டமிட்ட விடயங்கள் சாதாரணமானவை அல்ல என்பது சாதாரணமான ஒன்று அல்ல.
இது புலனாய்வுகளையும், பல குற்ற பயிற்சிகளையும் பெற்று அதில் இருந்து விடுபட மேற்கொள்ளும் இலகுவில் ஊகிக்க முடியாாத சதித்திட்டம்.
இவ்வாறு இஷாரா தனக்கென ஒரு Body Double - ஐ உருவாக்கி அதன் மூலம் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்த விடயங்கள் அந்த விடயங்களின் பின்னணி, மேலும் இஷாராவின் கொலை சதி என்பவற்றை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
