கண்கள் தோண்டி விற்கப்பட்ட இளைஞர்களுக்கும் அநுரவுக்குமான தொடர்பு! உறைய வைக்கும் உண்மைகள்
ஜேவிபி இளைஞர்களின் புரட்சி காலப்பகுதியிலும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சிறிலங்கா இராணுவத்தின் போர் காலத்தின் போதும் பல்வேறுபட்ட மனதை உறைய வைக்கும் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
அதில் இலங்கையின் வீதியோரங்களில் பிணங்கள் டயர்களில் கடத்தப்பட்டு எரிந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களையும் குறிப்பிடலாம்.
இது ஒரு இடத்தில் தான் என்று கூறுவதற்கு இல்லை, பல்வேறு தெருக்களில், சந்திகளில் பாலங்களில் என மக்கள் காணும் இடங்களில் எல்லாம் நாளாந்தம் இது சாதராணமாக இடம்பெற்று வந்தது.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் சிறிப்பு பிரிவான கொலக்கொட்டியா என்றழைக்கப்பட்ட எஸ்எப் பிரிவு மற்றும் சிஎஸ்யு என்றழைக்கப்பட்ட பிரிவுகளால் வெள்ளை வான்களில் கடத்தப்பட்ட இளைஞர்களே கடுமையான சித்திர வதைகளுக்கு பின்னர் இவ்வாறு எரியூட்டப்பட்டு வந்ததாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது.
இதன்போது, ஒருவித பயப்பீதியை மக்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கத்தோடு, இவ்வாறு பிணங்களை பகிரங்கமாக எரியூட்டும் உளவியல் முறையை அரச படைகள் கையாண்டதாக ஆரம்பத்தில் கருதப்பட்டு வந்தது.
எனினும், இந்த நடவடிக்கைகளுக்கு பின்னணியில் இருந்த அதிர்ச்சியூட்டும் பெரும் ரகசியத்தை ஜப்பானிய புலாய்வு செய்தியாளர் ஒருவர் ஆதாரங்களுடன் வெளிக் கொண்டு வந்திருந்தார்.
இவ்வாறு இலங்கையில் போர்காலத்தில் உடல் ரீதியாகவும், தற்போது உள ரீதியாகவும் தமிழர்கள் உள்ளிட்ட பலருக்கு நேர்ந்த அட்டூழியங்களையும், அதற்கு கடந்த காலங்களில் காணப்பட்ட அமைப்புக்களுக்கும் தற்போதைய அரசாங்கமும் எவ்வாறு நீதி வழங்க வேண்டும் என்பதை விரிவாக விவரிக்கின்றது ஐ.பி.சி தமிழின் உண்மைகள்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
