மேல்கொத்மலை நீர்தேகத்திலிருந்து பாடசாலை மாணவி சடலமாக மீட்பு..!
தலவாக்கலை காவல் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று மாலை பாடசாலை மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை காவல்துறையினருக்கு தகவல் அனுப்பியிருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் லிந்துலை பெயார்பீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 19 வயதுடைய முத்துரட்ணம் ஜீலோஜினி என்ற லிந்துலையில் பாடசாலை மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவி
இதேவேளை, சடலமாக மீட்கப்பட்டவர் இன்றுகாலை தனியார் வகுப்புக்காக தலவாக்கலை நகரத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வந்ததாக தலவாக்கலை காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் வாக்குமூலமளித்துள்ளனர்.
நுவரெலியா நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர் .




