குருக்கள்மடத்தில் சடலமாக கிடந்த ஆண்! தொடரும் விசாரணைகள்
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் தென்னம் தோப்பிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது, இன்று(13.10) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி காவல்துறையனிர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குருக்கள்மடம் தென்னம் தோப்பில் ஆண் ஒருவரின் கடலம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் களுவாஞ்சிகுடி காவல்துறையினருக்கு வழங்கிய தகவலுக்குகமைய ஸ்தலத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்னற நீதிபதி ரி.பிரதீபனின் உத்தரவுக்கமைய அங்கு விஜயம் செய்த களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பதப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்காகு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் குருக்கள்மடம் கிராமத்தைச் சேர்ந்த 81 வயதுடைய கதிர்காமத்தம்பி சேமசுந்தரம் என அடையாம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
