கொழும்பில் மர்மமாக உயிரிழந்து கிடந்த நபர்! தொடரும் விசாரணை
Colombo
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
தெஹிவளை பகுதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றிற்கு முன்னால் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாக இந்த மரணம் சம்பவித்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் தெஹிவளை, சஞ்சயபுர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகளை கல்கிசை பதில் நீதவான் கீத்ம பெர்னாண்டோ மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, இது குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |