ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
Hatton
By Pavi
ஹட்டன் பன்மூர் பகுதியில் உள்ள குளத்திலிருந்து இரு பிள்ளைகளின் தந்தையொருவரரின் சடலம் இன்று (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஹட்டன் வனராஜா தோட்டத்தைச் சேர்ந்தவர் 58 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கடந்த சில காலமாக கடை ஒன்றை நடத்தி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
குளக்கரையிலிருந்து உயிரிழந்தவரின் பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பாதணிகள் பணப்பை, குடை ஆகியனவும் காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளன.

அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி