30ஆம் திகதி தோண்டப்படும் சிறுமியின் சடலம்! சிறப்பு மருத்துவக் குழு தயார் நிலையில்
By Shalini
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயதுச் சிறுமியின் உடல் எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்பட உள்ளது.
இதேவேளை, குறித்த சடலத்திற்கு 3-பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழு 2 ஆவது பிரேத பரிசோதனையை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை குறிப்பிட்டார்.
சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து, மீண்டுமொரு முறை பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்ற அனுமதியுடள் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி