பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர்: முதல் போட்டி இன்று ஆரம்பம்
பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய (India) அணி மற்றும் அவுஸ்திரேலிய (Australia) அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
குறித்த போட்டியானது, இந்திய நேரப்படி காலை 7:50 மணிக்கு அவுஸ்திரேலியா பெர்த் நகரில் தொடங்குகிறது.
5 போட்டிகளை கொண்ட இந்த தொடர் ஜனவரி 7 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தொடர் 1996 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 16 பார்டர் கவாஸ்கர் தொடர் நடத்தப்பட்டுள்ள நிலையில் அதில் 10 முறை இந்தியாவும் 5 முறை அவுஸ்திரேலியாவும் வெற்றிபெற்றுள்ளன.ஒரு தொடர் சமநிலையில் முடிந்துள்ளது.
பார்டர்-கவாஸ்கர் டிராபி
இந்நிலையில் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்காத நிலையில் பும்ரா அணித்தலைராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நட்சத்திர வீரர் சுப்மன் கில்லும் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே கே எல் ராகுல் களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் கடைசி நேரத்தில் இந்திய அணி நிர்வாகம் ஒரு மாற்றத்தை செய்திருப்பதாகவும் தேவ்தத் படிக்கல் சேர்க்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் படிக்கல்லை விட கேஎல் ராகுல் நம்பர் மூன்றாவது வீரராக நன்றாக செயல்பட வாய்ப்பு இருப்பதாக கூறி ராகுலை மூன்றாவது வீரராக இந்திய அணி களம் இறக்க வாய்ப்புள்ளது.
இதனால் தொடக்க வீரராக அபிமன்யு ஈஸ்வரன் விளையாட கூடும் என தெரிகிறது. இந்திய ஏ அணியில் களமிறங்கிய அபிமன்யூ ஈஸ்வரன் நான்கு இன்னிங்ஸ்களை சேர்த்து மொத்தமே 36 ஓட்டங்கள் தான் அடித்துள்ளார்.
இந்திய அணி
ஆனால் அபிமன்யூ ஈஸ்வரன் ஒரு நல்ல டெஸ்ட் வீரராக தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார்.
இதனால் அபிமன்யு ஈஸ்வரனுக்கு தொடக்க வீரர் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கபடுவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று சர்பராஸ் கானுக்கு பதிலாக துருவ் ஜூரலுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது. வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவருக்கு பதில் ஆகாஷ் தீப் தான் விளையாடப் போகிறார் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் நிதிஷ் குமார் என்ற சகலதுறை ஆட்டக்காரருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் பல ஆண்டுகளாக வாய்ப்புக்காக காத்திருந்த அபிமான ஈஸ்வரன் அறிமுகமாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |