கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிய திருகோணமலை மாணவன்...! காவல்துறையில் சரண்
திருகோணமலையில் காணாமல்போனதாக தேடப்பட்டு வந்த பாடசாலை மாணவன் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன், இன்று (27-01-2026) நிட்டம்புவ பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட மூத்த சட்டத்தரணியும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான லாஹீரின் மகனான முக்சித் என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
கடத்தல்காரர்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் நேற்று (26-01-2026) திங்கட்கிழமை காலை 7.00 மணியிலிருந்து காணாமல் போயிருந்தார்.
இந்தநிலையில், அவர் தொடர்ச்சியாக தேடப்பட்டு வந்ததையடுத்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியோடிய மாணவன், காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைக்குச் சென்ற நிலையில் கடத்தப்பட்டதாகக் கருதப்பட்ட இம்மாணவன், கடத்தல்காரர்களிடமிருந்து தந்திரமாக தப்பித்து நிட்டம்புவ காவல் நிலையத்தில் பாதுகாப்புத் தேடி சரணடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த மாணவன் மீட்கப்படும் போது உடலில் அடி காயங்கள் காணப்பட்டதாக காவல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து நிட்டம்புவ காவல்துறையினர் திருகோணமலையிலுள்ள மாணவனின் பெற்றோருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலறிந்த பெற்றோர் தற்போது மாணவனைப் பார்ப்பதற்காக நிட்டம்புவ நோக்கி விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |