மரணப்படுக்கையிலும் ஐவரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞன்!
கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞனால் 5 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூளைச்சாவு அடைந்த பல்கலைக்கழக மாணவனின் இரு சிறுநீரகங்கள், இதயம், கணையம், கல்லீரல், கண்கள் ஆகியவை வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் உள்ள ஐந்து நோயாளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பார்வையற்ற இருவருக்கு சத்திரசிகிச்சை செய்வதற்காக அவரது கண்கள் இலங்கை கண் மருத்துவ சங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வெயங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இந்த உடலுறுப்பு தானத்தினை செய்துவிட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் மூளைச்சாவு அடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்! |