பிரித்தானிய பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!
தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பிரித்தானியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு நிலையம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரித்தானிய விமான நிலையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 500 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்நாட்டின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை உடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயணிகளின் கவனிப்பிற்கு

இதனால் விமான சேவைகள் தடைப்பட்டுள்ள நிலையில் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ள போதிலும் குறிப்பிடத்தக்க தாமதங்கள் தொடர்வதாகவே விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் நேர அட்டவணை சீர்குலைந்துள்ளதால் பயணிகள் விமான நிலையத்திற்குச்
செல்வதற்கு முன் தங்கள் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.