உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரித்தானிய பிரதமர்!
தைத்திருநாளை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் பிரித்தானியா (United Kingdom) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உலகில் பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழர்கள் கொண்டாடும் நாளாக இந்த தை பொங்கல் பார்க்கப்படுகிறது.
பிரித்தானிய பிரதமர்
இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும், தமிழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
To the British Tamil community and Tamils around the world, we’d like to wish you a very happy Thai Pongal. pic.twitter.com/gMu6lyueH3
— UK Prime Minister (@10DowningStreet) January 14, 2025
இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் “பிரித்தானியாவில் உள்ள தமிழ் சமூகத்திற்கும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும், தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என தனது வாழ்த்து செய்தியினை பதிவிட்டுள்ளார்.
மனித குலத்தின் மாண்பை நிலைநாட்டும் நன்றியுணர்வுக்கு மகுடம் சூட்டும் திருநாளாக தமிழர்களின் தைத்திருநாள் இன்று (14.01.2025) கொண்டாடப்படுகின்றது.
மனிதக் குலத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கும் நன்றியுணர்வு என்ற மாண்புமிக்க அம்சத்தை வருடத்தில் ஒருமுறை பரீட்சித்துப் பார்க்கும் நாளாகத் தைப்பொங்கல் அல்லது சூரியப்பொங்கல் காணப்படுகினறமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |