அடிச்ச சிக்ஸரில் பறந்த மேற்கூரை : அதிஷ்டவசமாக தப்பிய ரசிகர்கள் : வைரலான காணொளி
இங்கிலாந்து(england) அணியுடனான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் சமர் ஜோசப் அடித்த சிக்ஸரில் மைதான மேற்கூரை உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹோமில் பரபரப்பாக நடந்து வருகிறது.
கடைசியாக களமிறங்கிய சமர் ஜோசப்
இந்த போட்டியில் கடைசியாக களமிறங்கிய சமர் ஜோசப் 27 பந்துகளில் 33 ஓட்டங்களை அடித்து டெஸ்ட் போட்டியில் ஒரு ரி 20 போட்டி போல விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது 107வது ஓவரில் கஸ் அட்கின்ஸன் வீசிய பந்தை சமர் ஜோசப் அடித்து நொருக்கினார்.
சிதறி கீழே விழுந்த கூரைகள்
அந்த பந்து மிக உயரமாக சென்று சிக்ஸர் ஆனது. அப்போது மைதானத்தின் மேல் இருந்த ஓடுகளில் வேகமாக பந்து மோதியதில் ஓடுகள் சிதறி கீழே இருந்த பார்வையாளர்கள் மீது விழுந்தன.
Omg that six by Shamar Joseph broke the roof and part of that roof fell on the spectators unbelievable#WTC25 | ? #ENGvWI pic.twitter.com/IlyN7ExB7I
— Vijay (@VIJAYANAYAK17) July 20, 2024
ஆனால் அதிஷ்டவசமாக அதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சமர் ஜோசப்பின் அதிரடி சிக்ஸர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |