பாதீட்டில் பெரும்பங்கு ராஜபக்சர்கள் வசம்!! அம்பலத்துக்கு வந்த தகவல்

budget parliament Anura Kumara Dissanayake
By Vanan Nov 20, 2021 01:58 PM GMT
Report

அரசாங்கத்தின் அடுத்த வருடத்திற்கான பாதீட்டில் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட ஐயாயிரத்து 200 மில்லியன் ரூபாயில் ராஜபக்சர்களின் குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சுகளுக்கு மாத்திரம் மூவாயிரத்து 470 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது பாதீட்டு ஒதுக்கீட்டில் 64 வீத ஒதுக்கீடாகும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அடுத்த வருடத்திற்கான இரண்டாம் வாசிப்பு மீதான 6ஆம் நாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

“இந்த நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்ப வேண்டுமெனின் என்ன செய்ய வேண்டும். இந்த நாட்டின் அரசியல்வாதிகள் வரப்பிரசாதங்களை கைவிட்டு வீதிக்கு இறங்க வேண்டும். வானத்திலிருந்து கீழிறங்க வேண்டும்.

அரசியல் எனப்படுவது வரப்பிரசாதங்களுக்கான பதவியல்ல. மக்களுடன் மக்களாக இணைந்து அவர்களின் பிரச்சினைகளை கேட்றிய வேண்டும். எனினும் உங்களால் இதனை செய்ய முடியாது.

அமைச்சரவையில் நான்கு ராஜபக்சாக்கள் இருக்கின்றனர். இராஜாங்க அமைச்சர் ஒருவர் இருக்கின்றார். 

அரசாங்கத்தின் அடுத்த வருடத்திற்கான பாதீட்டில் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த செலவு ஐயாயிரத்து 200 மில்லியன் ரூபாய். இதில் ராஜபக்சர்களின் குடும்பத்தைச் சோ்ந்த அமைச்சிகளுக்கு மாத்திரம் மூவாயிரத்து 470 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு மாத்திரம் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முழு அரச செலவில் அது 64 வீதமாகும். இதன் ஊடாக எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும். இதன் ஊடாக எவ்வாறு ஒரு சமச்சீரான நிலைமையை ஏற்படுத்த முடியும். ஏனைய அமைச்சுகள் எலும்புகளை சூப்பிக்கொண்டிருக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் அவசியத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனினும், அது இங்கு இடம்பெறவில்லை. வரப்பிரசாதங்களை கைவிட்டு இதனை மக்கள் சேவையாக கருதிச் செயற்பட வேண்டும். எனினும் அது இடம்பெறப்போவது இல்லை. அமைச்சர்களுக்கு எதற்கு காவல்துறை பாதுகாப்பு, அதிலிருந்து நாம் முதலில் வெளியேற வேண்டும். அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளை முதலில் மீளப்பெற வேண்டும். அவை அவசியமல்லை.

பெரும்பாலான அமைச்சர்களுக்கு கொழும்பில் சொந்தாமாக வீடுகள் காணப்படுகின்றன. அங்கிருந்து பணிகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அனைத்து தேவையற்ற அனைத்து செலவுகளையும் இல்லாதே செய்ய வேண்டும்” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி