டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட் : சாதனை புரிந்த ஜஸ்பிரித் பும்ரா
இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah), டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 20க்கும் குறைவான சராசரியுடன் 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
மெல்போர்னில் நடந்து வரும் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் நான்காம் போட்டியின், இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் போது அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
மேற்கிந்திய தீவு
தனது 44வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பும்ரா, 19.38 சராசரியுடன் 202 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் மிகவும் குறைந்த சராசரியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலில், பும்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் மால்கம் மார்ஷல் (376 விக்கெட்டுகள், 20.94 சராசரி), ஜோயல் கார்னர் (259 விக்கெட்டுகள், 20.97 சராசரி) மற்றும் கர்ட்லி அம்ப்ரோஸ் (405 விக்கெட்டுகள், 20.99 சராசரி) ஆகிய மூவரும் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்... |