இரத்தினபுரி கலஹிட்டிய பகுதியில் பேருந்து விபத்து - 14 பேர் காயம்
Ratnapura
Accident
By Beulah
இலங்கையில் சமீப காலங்களில் பேருந்து விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
அவ்வகையில், இரத்தினபுரி கலஹிட்டிய பகுதியில் பேருந்து விபத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் இன்று (30) காலை தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்திற்கான காரணம்

கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பேருந்து இன்று காலை 5 மற்றும் 6 மணிக்கு இடையில் வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்குக் காரணம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி