திருகோணமலை - மட்டக்களப்பு தொடருந்து சேவைகள் மறு அறிவித்தல் வரை ரத்து
கிழக்குப் பாதையில் இன்று (27) இயக்க திட்டமிடப்பட்டிருந்த 6 நீண்ட தூர, நகரங்களுக்கு இடையேயான மற்றும் இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவைகளை இரத்து செய்ய தொடருந்து துறை முடிவு செய்துள்ளது.
தற்போதைய பாதகமான வானிலை காரணமாக கிழக்குப் பாதையில் உள்ள ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தொடருந்து பாதை நீரில் மூழ்கியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிழக்கு தொடருந்து மார்க்கத்தில் திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான பின்வரும் தொடருந்து சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு தொடருந்து
காலை 06.00 கொழும்பு கோட்டை / மட்டக்களப்பு
பிற்பகல் 03.15 மணி கொழும்பு கோட்டை மட்டக்களப்பு - இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தொடருந்து.
இரவு 09.30 மணி கொழும்பு கோட்டை / திருகோணமலை இரவு அஞ்சல் தொடருந்து
இரவு 11.00 மணி கொழும்பு கோட்டை மட்டக்களப்பு இரவு நகரங்களுக்கு இடையேயான விரைவு தொடருந்து.
கொழும்புக்கு செல்லும் தொடருந்து
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு அதிகாலை 01.30 மணிக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தொடருந்து.
06.10 மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டைக்கு செல்லும் தொடருந்து.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இரவு அஞ்சல் தொடருந்து இரவு 07.40 மணிக்கு.
திருகோணமலையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இரவு அஞ்சல் தொடருந்து இரவு 7.30 மணிக்கு ஆகியவை இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன.
பேருந்து விபத்து
அத்தோடு, மொனராகலை பகுதியில் 23 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
நாட்டில் பெய்து வரும் அடைமழை காரணமாக கும்புக்கன் ஓயா பெருக்கெடுத்து ஓடியதால், வெல்லவாய-கொழும்பு பிரதான வீதியின் கும்புக்கன் பகுதி நீரில் மூழ்கியுள்ளது.
எனினும், பேருந்தில் இருந்த பயணிகளை விரைவாக மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன,
அத்தோடு, பேருந்தும் தண்ணீரில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 4 மணி நேரம் முன்