ரணில் யாழ் வருகை - முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்..! தடுத்து நிறுத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
தேசிய தைப்பொங்கல் நிகழ்வுக்காக நாட்டினுடைய அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் இன்று யாழ்ப்பாணத்திலே பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து தமிழ் மக்களது நாளாந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனவும் நிரந்தர தீர்வை வலியுறுத்தியும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளனர்.
அந்த வகையிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் பகுதிக்கு பயணம் செய்வதை தடுக்கும் முகமாக பல்வேறு இடங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு இவர்கள் செல்லும் பேருந்துகள் வழிமறிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பயனித்த பேருந்து வட்டுவாகல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு பேருந்து மற்றும் சாரதியின் விபரங்கள் பதியப்பட்டு சுமார் பத்து நிமிடம் வரை தாமதப்படுத்தி அனுப்பப்பட்டனர்.
அதிகளவான இராணுவத்தினர் குவிப்பு
இதனை தொடர்ந்து ஆனையிறவு பகுதியில் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பயணித்த பேருந்து மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பயணித்த பேருந்து என்பன தடுத்து நிறுத்தப்பட்டு பேருந்து விபரங்கள் சாரதியின் விபரங்கள் பதியப்பட்டு பேருந்தில் ஏறி மக்களை எங்கு செல்கிறீர்கள் என விசாரித்து சுமார் பத்து நிமிடங்களுக்கு பின்னர் செல்ல அனுமதித்தனர்.
இதனைவிட ஆனையிறவு பகுதியில் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு போக்குவரத்து காவல்துறையினரும் அழைக்கப்பட்டு பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டு பேருந்துகளில் செல்பவர்கள் பேருந்துகளில் வருகின்றவர்கள் எங்கு செல்கின்றனர் என விளக்கத்தை வாகன சாரதியின் உடைய பெயர் அடையாள அட்டை விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்





நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
