யாழில் பேருந்து சாரதி மீது தாக்குதல் : தீவகத்தில் சேவை முடக்கம்
யாழ்ப்பாணம் தீவகத்தில் நாளை (09) சேவை முடக்கத்தை முன்னெடுக்க உள்ளதாக தனியார் பேருந்து சேவை உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் பேருந்து சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தவறினால் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி 780 வழித்தடத்தில் நேற்று (7) மாலை பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை மோடார் சைக்கிளில் வந்த ஒருவர் வழிமறித்து, சாரதி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறைப்பாடு
கடுமையான தாக்குதலுக்கு உள்ளான சாரதி ஊர்காவற்றுறை காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்த பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சாரதி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த குறித்த சாலையின் தனியார் பேருந்து நிர்வாகத்தினர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் தாக்குதலாளியை கைது செய்ய வேண்டும் என்று கோரி தனியார் பேருந்து சேவை உரிமையாளர்கள் சங்கம் நாளை தீவகத்தில் சேவை முடக்கத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 23 மணி நேரம் முன்