யாழில் திறக்கப்பட்ட வீதி : பேருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு
764 ஆம் இலக்க தனியார் பேருந்து சேவை இனிமேல் காங்கேசன்துறை வரை பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தனியார் பேருந்து சேவையின் 764 பிரிவின் முன்னல் தலைவர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி 35 வருடங்களின் பின் இன்றையதினம் (10) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வீதி விடுவிப்பு
இந்த வீதி விடுவிப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த பாதை விடுவிப்பு எமக்கு மிகவும் மகிழ்ச்சிகரமானது.
எமது பேருந்து சேவை இதுவரை வசாவிளான் வரையில் சேவையில் ஈடுபட்டது.
இனிமேல் கேகேஎஸ் வரைக்கும் பயணிக்கும், மீண்டும் அதே மார்க்கம் ஊடாக யாழ்ப்பாணம் வரை பயணிக்கும்.
பயண சேவை
இந்த பயண சேவைகளை நாம் படிப்படியாக எமது சேவை அட்டவணைகளை மேற்கொண்டு தீர்மானிப்போம்.
பாதை பூட்டப்படுவதற்கு முன்பு நாம் காங்கேசன்துறை சந்தியில் இருந்து எமது சேவையில் ஈடுபட்டதைப் போலவே மீண்டும் எமது சேவைகளை மேற்கொள்வோம்.
அன்ரனிபுரம், மயிலிட்டி பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த வீதி விடுவிப்பை பொங்கல் வைத்து கொண்டாடி மக்கள் கொண்டாடி மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








